தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மரத்தில் இருந்து விழுந்த டிரைவர், விவசாய தொழிலாளி உயிரிழப்பு

மரத்தில் இருந்து விழுந்த டிரைவர், விவசாய தொழிலாளி உயிரிழப்பு

மரத்தில் இருந்து விழுந்த டிரைவர், விவசாய தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஏப் 30, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த புனவாசிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபிரபு, 27, கார் டிரைவர். தனது நண்பர்களுடன் கே.புதுப்பட்டி தீபக் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், நேற்று முன்தினம் இளநீர் பறிப்பதற்காக மரம் ஏறிய போது தவறி விழுந்தார். உடனிருந்த நண்பர்கள் தீபக், புஷ்பராஜ் ஆகியோர் மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனை செய்தபோது, ஆனந்த பிரபு இறந்து விட்டதாக கூறினர்.

ஆனந்த பிரபுவிற்கு மனைவி சங்கீதா, மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது தம்பி பிரதீப், 24, கொடுத்த புகாரின்படி லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

* இதேபோல் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ். 25, என்பவர் நேற்று மதியம் காவக்காரப்பாளையத்தில் உள்ள பனை மரத்தில், நுங்கு வெட்ட ஏறிய போது தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ

மனைக்கு செல்லும்போது இறந்தார்.

இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us