ADDED : செப் 13, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்தவர் அய்யாசாமி, 86; கடந்த, 2020 மே, 9ல் அதிகாலையில் பாரியூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஈச்சர் வேன் மோதியதில் இறந்தார். விபத்துக்கு காரணமான வேன் டிரைவரான மதுரையை சேர்ந்த முத்துவேல், 46, மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோபி ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி தாயுமானவர் நேற்று தீர்ப்பளித்தார். வேன் டிரைவரான முத்துவேலுக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.