/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விபத்து வழக்கில் டிரைவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
/
விபத்து வழக்கில் டிரைவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
விபத்து வழக்கில் டிரைவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
விபத்து வழக்கில் டிரைவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
ADDED : செப் 13, 2025 01:53 AM
கோபி, கோபி அருகே விபத்து வழக்கில், வேன் டிரைவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் தேவராஜ், 45, டிரைவர்; கடந்த, 2018 ஏப்.,23ல், மேக்சி டிராக் வேனில், வாழை இலை அறுக்க, 17 கூலியாட்களை ஏற்றி சென்றார். டி.ஜி.புதுார் அருகே முனியப்பன் கோவில் பகுதியில் வேன் கவிழ்ந்ததில், சத்தியை சேர்ந்த மோகன், 35, பலியானார்.
விபத்து குறித்து பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி தாயுமானவர் நேற்று தீர்ப்பளித்தார். வேன் டிரைவரான தேவராஜூக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.