/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முட்செடிகளால் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
/
முட்செடிகளால் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
ADDED : ஏப் 30, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகில், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக வாகனங்களில், லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் செல்கின்றனர். சுரங்கப்பாதை தடுப்புச்சுவர் பகுதிகளில், அதிகமான முட்செடிகள் வளர்ந்து வருகிறது.
அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மீது, முட் செடிகள் படுகிறது. இதனால் சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே, சுரங்கப்பாதையில் வளர்ந்து வரும் முட்செடிகளை அகற்ற, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

