/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிற்பேட்டை சாலையில் நிறுத்தும் லாரிகளால் வாகன ஓட்டுனர்கள் தவிப்பு

ADDED : அக் 06, 2025 04:24 AM
கரூர்: கரூரில், தொழிற்பேட்டை சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படு-வதால், வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
கரூர் பசுபதிபாளையம் அருகில் உள்ள தொழிற்பேட்டையில், டாஸ்மாக், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்கள் உள்ளன. இங்கு, கொசுவலை உள்பட ஏராளமான தொழிற்சா-லைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள டாஸ்மாக், தமிழ்-நாடு நுகர் பொருள் வாணிப கழக குடோனுக்கு பொருட்களை ஏற்றி செல்ல தினமும் லாரிகள் வந்து செல்கின்றன. குடோனுக்கு வரும் லாரிகள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இந்த சாலை தடுப்பு சுவர் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.
அதில், ஒரு புறத்தில் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த சாலை வழியாக பஸ்கள் உட்பட பல வாகனங்கள் செல்கின்றன. அதில், சிறிய வாகனங்கள் சமாளித்து சென்று விடுகின்றன. ஆனால், பஸ் போன்ற கனரக வாகனங்கள் வரும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையோரம் லாரிகள் நிறுத்துவது குறித்து கண்காணித்து, அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடு-களை மேற்கொள்ள வேண்டும்.