தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேகத்தடையில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்

வேகத்தடையில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்

வேகத்தடையில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்


ADDED : ஜூலை 24, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், ஜூலை :கரூர் நகரின் பல இடங்களில், விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத்

தடைகளால் விபத்து ஏற்படுகிறது.

கரூர் மாநகராட்சி பகுதிகளில், விபத்துகளை தடுப்பதற்காக பள்ளிகள், மருத்துவமனைகள், சாலை சந்திப்பு, கோவில்கள், மக்கள் அதிகமாக கடந்து செல்லும் பகுதி, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேகத்தடை அமைப்பதற்கு முன், அந்த இடத்தின் இரு மார்க்கத்திலும், 10 மீட்டர் துாரத்துக்கு முன்பாக வெள்ளை பெயின்ட்டால் எச்சரிக்கை கோடு வரைதல் வேண்டும். வேகத்தடை அமைக்கும்போது, 10 செ.மீ., உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. வேகத்தடை மீது வெள்ளை நிற பெயின்ட் அடிக்க வேண்டும்.

வேகத்தடைக்கான சரிவு துவங்கும் இடத்தில், ஒளிரும் டிவைடர் (ஒளிர் பட்டை) விளக்கு பொருத்த வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை விதி

உள்ளது. சில சாலைகளில் மட்டுமே, விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உட்புற சாலைகள், கிளை சாலைகள், புறநகர் பகுதிகளில் பெரும்பாலும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கரூர் தெற்கு காந்திகிராமம் அருகில், வள்ளலார் கோவில் சாலையில் இரண்டு இடங்களில் வேகத்தடை உள்ளது. வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை கோடு, ஒளிரும் டிவைடர் வைக்கப்படவில்லை.

வேகமாக வரும்போது, இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களும், அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில்

சிக்குகின்றன.

விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வெள்ளை வண்ணம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us