சேதமடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளால் பீதியில் ஓட்டுனர்கள்
சேதமடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளால் பீதியில் ஓட்டுனர்கள்
ADDED : செப் 20, 2026 07:16 AM

கரூர்:கரூர்
அருகே ரயில்வே மேம்பாலத்தில், வைக்கப்பட்டிருந்த இரும்பு
கம்பியிலான தடுப்புகள் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், வாகன
ஓட்டிகள் பீதியில் சென்று வருகின்றனர்.
கரூர் - சேலம் பழைய சாலையின்
குறுக்கே, ஈரோடு மற்றும் சேலம் ரயில்வே வழித்தடத்தில், 25
ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. கடந்தாண்டு,
இரண்டு ரயில்வே வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன. இதனால்,
உயர்மட்ட பாலத்தின் இருபக்கங்களிலும், பொதுமக்கள் தவறி ரயில்வே
மின்தடத்தின் மீது விழாமல் இருக்க, இரும்பு கம்பியிலான தடுப்பு
அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்
வாகனம் மோதியதில், இரும்பு கம்பிகள் சேதம் அடைந்தது. அதை மாற்றாமல்,
நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விட்டு விட்ட னர்.
தற்போது, பாலத்தில் போக்குவரத்து க்கு இடைஞ்சலாக, இரும்பு கம்பி
தடுப்பு உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் உயர்மட்ட பாலத்தில்
செல்வோர், தடுப்பு கம்பிகள் இருப்பது தெரியாமல் விபத்தில்
சிக்குகின்றனர்.
எனவே, வெங்கமேடு ரயில்வே உயர்மட்ட பாலத்தில்,
சேதமடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை மாற்றி, புதிதாக வைக்க
வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
