/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி
/
வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி
வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி
வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி
ADDED : செப் 27, 2024 01:36 AM
வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த
மரத்தால் ஓட்டுனர்கள் அவதி
கிருஷ்ணராயபுரம், செப். 27-
மகிளிப்பட்டி, இரட்டை வாய்க்கால் நடுகரையில் பழமையான மரம் சாய்ந்து விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை வாய்க்கால் மேட்டு மகாதானபுரம், மகிளிப்பட்டி வழியாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது.
தற்போது மகிளிப்பட்டி, மேட்டுமகாதானபுரம் இரட்டை வாய்க்கால் நடுகரையில் பழமையான மரம் ஒன்று சாய்ந்து விழுந்துள்ளது. இந்த மரம் சாய்ந்துள்ளதால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகனங்கள் வரும் நடு வழியில் மரம் விழுந்துள்ளதால், நீர்வளத்துறை நிர்வாகத்தினர் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.