/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி
/
வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி
வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி
வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி
ADDED : அக் 25, 2025 01:27 AM
கரூர், கரூர்-வாங்கல் சாலையில் அதிகளவில் குப்பை குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வாங்கல் சாலையில் அதிகளவு குப்பை தேங்கியுள்ளது.
குறிப்பாக, இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், பட்டாசு குப்பைகள் குவிந்துள்ளது. சாலையில் குவிந்துள்ள குப்பை காற்றில் பறக்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால், துர்நாற்றம் வீசுகிறது எனவே, சாலையில் குவிந்துள்ள குப்பைகளை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.