வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரக்கிளைகளால் ஓட்டுனர்கள் அவதி
வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரக்கிளைகளால் ஓட்டுனர்கள் அவதி
ADDED : ஜூன் 07, 2026 05:26 AM

கரூர்:கரூர்
மற்றும் சுற்று வட்டார சாலைகளில், வழிகாட்டி போர்டுகளை
மரக்கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்
மாநகரை சுற்றி சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை
மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன.
அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில், ஊர் பெயர்கள்,
கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல்
வழிகாட்டி போர்டுகளில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பல
சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் வளர்ந்து
மறைத்துள்ளது. இதனால், வெளி மாநில லாரி ஓட்டுனர்கள், சுற்றுலா பஸ்,
வேன் மற்றும் கார் டிரைவர்கள் வழிகாட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை
படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகளை மறைக்காத
வகையில், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள்
எதிர்பார்க்கின்றனர்.
