/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வோருக்கு சொட்டு மருந்து அவசியம்'

ADDED : ஆக 03, 2025 01:00 AM
கரூர், போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, பயணம் மேற்கொள்பவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி அவசியம்.
இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 9.5 லட்சம் கர்ப்பிணிகளுக்கும், 8.7 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து, நமது நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருபவர்கள், நமது நாட்டில் இருந்து போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, இளம்பிள்ளை வாதம் வராமல் தடுப்பதற்கு போலியோ சொட்டு மருந்தும், போலியோ தடுப்பூசியும் போட வேண்டும்.
உலகளவில் போலிேயாவி னால் பாதிக்கப்பட்ட நாடுகளாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கேமரூன் நைஜீரியா, மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர், காங்கோ, டி.ஆர்.காங்கோ, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ளும்போது, போலியோ நோய் வராமல் தடுக்கும் விதமாக, கரூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், வெளிநாடு செல்பவர்களுக்கான போலியோ தடுப்பூசி முகாம் நடக்கிறது. இங்கு, பதிவு செய்து போலியோ சொட்டு மருந்து, போலியோ தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.