தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ போதை ஒழிப்பு விழிப்புணர்வு

போதை ஒழிப்பு விழிப்புணர்வு

போதை ஒழிப்பு விழிப்புணர்வு


ADDED : ஜூலை 14, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் குளித்-தலை லயன்ஸ் கிளப் இணைந்து, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, லாலாப்-பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தின.

குளித்தலை லயன்ஸ் சங்கம் கிருஷ்ணமாச்சாரி தலைமை வகித்தார். போதை ஒழிப்பு விழிப்பு-ணர்வு பேரணியை, குளித்தலை கிராமியம் நிர்-வாகி நாரயணன் துவக்கி வைத்தார்.இப்பேரணி, லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்-பள்ளி வளாகத்தில் துவங்கி லாலாப்பேட்டை காந்திசிலை வழியாக கரூர், திருச்சி பழைய நெடுஞ்சாலை சந்தைப்பேட்டை வரை சென்று நிறைவாக பள்ளி வளாகத்தில் முடிந்தது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகள் மாணவர்க-ளிடம் எடுத்துக்கூறப்பட்டது.

இதில், போதை பழக்கம் காரணமாக பல பாதிப்-புகள் ஏற்படுகிறது. இதை மாணவர்கள் விழிப்பு-ணர்வுடன் இருந்து, எதிர்காலத்தில் போதை இல்-லாத நாடாக மாற்றம் கொண்டு வர வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குளித்தலை லயன்ஸ் சங்க தலைவர் சந்திரசே-கரன், வட்டார தலைவர் அசோக்குமார், வளர்ச்சி தலைவர் உறுப்பினர் மாயவன், மகாத்மா காந்தி அறக்கட்டளை நிர்வாகிகள் தட்சிண-மூர்த்தி, ராகவன், மயில்வாகணன், தினேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us