/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூலி தொழிலாளியை தாக்கிய போதை வாலிபர்கள் கைது
/
கூலி தொழிலாளியை தாக்கிய போதை வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 41; இவர் கடந்த, 7 ல் இரவு, திருகாம்புலியூர் டாஸ்மாக் பார் அருகே, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சந்தோ ஷ், 21; அவரது தம்பி பூபதி, 19; அன்பு, 24; புலியூரை சேர்ந்த ஜான் டி ரோஸ், 27; ஆகியோர், சண்முக சுந்தரத்தை பார்த்து கிண்டல் செய்துள்ளனர்.
அதை தட்டி கேட்ட, சண்முக சுந்தரத்தை நான்கு பேரும், குடிபோதையில் அடித்து உதைத்தனர். இதுகுறித்து, சண்முக சுந்தரம் அளித்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் சந்தோஷ் உள்பட, நான்கு பேரை கைது செய்தனர்.

