ADDED : ஜன 30, 2026 05:00 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை பொருளுக்கு எதிரான மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய, போதை பொருட்க-ளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருட்களை தவிர்க்க வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர். சேவியர் தெரு, எஸ்.ஆர்.ஓ. தெரு, கரூர் சாலை வழியாக ஊர்வலம் சென்றது. பொதுமக்கள், வணிகர்களிடம் போதை பொருட்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், அரவக்குறிச்சி டி.எஸ்.பி., அப்துல் கபூர் பங்கேற்றார். போதை பொருட்களுக்கு எதிரான மன்றத்தின் உறுப்பினர்களான மருத்துவர்கள் முரளி, அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
