ADDED : ஜூன் 24, 2026 04:23 AM

அரவக்குறிச்சி:கரூர்
மாவட்டம், தென்னிலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும்
தென்னிலை போலீசார் சார்பில், போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராகவும்,
அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி
நடத்தப்பட்டது.
தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியர்
ராதாகிருஷ்ணன் கொடியசைத்து, தொடங்கி வைத்தார். கல்லுாரி வளாகத்தில்
இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்கள்,
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியில்
பங்கேற்ற மாணவ, மாணவியர், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், போதையின்
தீமைகளை விளக்கும் முழக்கங்களை எழுப்பியவாறும் பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
