/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டையால் தாக்கியதில் குடிபோதை கணவன் சாவு; கரூரில் மனைவி கைது
/
கட்டையால் தாக்கியதில் குடிபோதை கணவன் சாவு; கரூரில் மனைவி கைது
கட்டையால் தாக்கியதில் குடிபோதை கணவன் சாவு; கரூரில் மனைவி கைது
கட்டையால் தாக்கியதில் குடிபோதை கணவன் சாவு; கரூரில் மனைவி கைது
ADDED : ஏப் 15, 2025 06:29 AM
கரூர்: கரூர், ராயனுார், தில்லை நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 33, கூலி தொழிலாளி. இவரின் மனைவி சரண்யா, 30; தம்பதியின் மகன் சிவபாலன், 2; ஓராண்டுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டான்.
குடிபோதை பழக்கம் கொண்ட சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு சென்றார். மனைவி-யுடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யா, கட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம-டைந்த கணவனை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னைக்கு அழைத்து சென்றார். தலையில் நான்கு தையல் போட்டு சிகிச்சை அளித்த நிலையில், திருமாநிலையூர் முதல் கிழக்கு தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு கொண்டு சென்று கணவரை விட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சந்திரசேகருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து சரண்யாவை பசுபதிபா-ளையம் போலீசார் கைது செய்தனர்.