தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர், அரவக்குறிச்சிக்கு டி.எஸ்.பி.,க்கள் நியமனம்

கரூர், அரவக்குறிச்சிக்கு டி.எஸ்.பி.,க்கள் நியமனம்

கரூர், அரவக்குறிச்சிக்கு டி.எஸ்.பி.,க்கள் நியமனம்


ADDED : ஜூன் 01, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மற்றும் அரவக்குறிச்சிக்கு புதிய போலீஸ் டி.எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், துாத்துக்குடி மாவட்டம், சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், அரவக்குறிச்சி டி.எஸ்.பி., அப்துல் ஜாபர், தர்மபுரி மாவட்டம், சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும் கடந்த மே, 19ல் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சியில் இருந்த, 24 புதிய டி.எஸ்.பி.,களுக்கு சமீபத்தில் பணியிடம் ஒதுக்கப்பட்டது. அதில், வேலுார் மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த ராஜராஜன், கரூர் டவுன் சப்-டிவிசனுக்கும், தருமபுரியில் பயிற்சியில் இருந்த பானு, அரவக்குறிச்சி சப்-டிவிசனுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us