/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துபாய் டிராவல்ஸ் அதிபர் உடல் தோண்டி எடுப்பு
/
துபாய் டிராவல்ஸ் அதிபர் உடல் தோண்டி எடுப்பு
ADDED : மே 04, 2025 02:54 AM
கரூர்:துபாயில் டிராவல்ஸ் நடத்தி வந்த, திருவாரூரை சேர்ந்த சிகாமணி, 47, கோவையில் கொலை செய்யப்பட்டு, கரூரில் புதைக்கப்பட்டார். இது தொடர்பாக, கோவையை சேர்ந்த தியாகராஜன் கோர்ட்டில் சரணடைந்தார்.
தன் கள்ளக்காதலி மகளான சாரதாவுடன் சேர்ந்து சிகாமணியை கொன்றதாக கூறினார்.
நேற்று கரூர் மயானத்தில் சிகாமணி உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தியாகராஜன், அவரது கள்ளக்காதலி கோமதி, கூலிப்படையை சேர்ந்த புதியவன், வேலைக்கார பெண் சுவாதி, கோமதியின் சகோதரி நீலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சாரதாவை தேடி வருகின்றனர்.
துபாய் சென்ற சாரதா ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு போலீசார், 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

