தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தாழ்வான சுவராக உள்ளதால் பறக்கும் குப்பையால் தவிப்பு

தாழ்வான சுவராக உள்ளதால் பறக்கும் குப்பையால் தவிப்பு

தாழ்வான சுவராக உள்ளதால் பறக்கும் குப்பையால் தவிப்பு


ADDED : ஜூலை 04, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் வாங்கல் பகுதியில், மாநகராட்சி குப்பை கிடங்கின் சுற்றுச்சுவர் தாழ்வாக உள்ளதால், சாலையில் குப்பை பறப்பதால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

கரூர், வாங்கல் சாலையில் அரசு காலனி அருகில் குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, இங்கு கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கின் சுற்றுச்சுவர் தாழ்வாக உள்ளதால், குப்பை காற்றில் பறந்து சாலையின் பல்வேறு இடங்களில் பரவி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், துர்நாற்றம் காரணமாக அவ்வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். குப்பை கிடங்கின் சுற்றுச்சுவரை உயரமாக கட்ட வேண்டும் என, அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த பகுதியை பார்வையிட்டு சுற்றுச்சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us