ADDED : செப் 23, 2024 04:37 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., வை.புதுாரில், இ.கம்யூ., கட்சியின் கிளை மாநாடு, நேற்று காலை, 10:00 மணிக்கு, மறைந்த சீதாராம் யெச்சூரி நினைவகத்தில் நடந்தது. நிர்வாகிகள் சத்திய பிரியா, சரவணன் ஆகியோர் தலைமை வகித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தனர்.
அதில், வை.புதுாரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டி கொடுக்க வேண்டும். வை.புதுாரில் சிதில-மடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். சிமென்ட் சாலையை சீர்படுத்த வேண்டும். வை.புதுார் பஸ் ஸ்டாப்பில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வை.புதுாரில் கட்டி முடிக்கப்-பட்டு, பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை, புதிய சாலைகளாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.