ADDED : அக் 10, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில், கிளை செயலாளர் ராமச்-சந்திரன் தலைமையில், வேலுசாமிபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மாநில அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், கரூர் பஸ் ஸ்டாண்ட் தென் பகுதியில், மாநகராட்சி நிர்வாகம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் நாட்ராயன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், மோகன்குமார், ராஜேந்திரன், இனாம் கரூர் நகர செயலாளர் லட்சுமி காந்தன் உள்பட பலர் பங்-கேற்றனர்.