ADDED : ஏப் 26, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் மாவட்ட, இ.கம்யூ., கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழக கவர்னர் ரவி, அரசியல் சாசன விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்தும், மத்திய அரசு தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகம், மோகன் குமார், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் ரத்தினம், நிர்வாகிகள் வடிவேலன், லட்சுமி சுந்தரம், கலாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

