/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதலீட்டாளர்கள் புகார் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் அழைப்பு

ADDED : அக் 05, 2025 01:10 AM
கரூர், கரூரில் செயல்பட்டு வந்த, எஸ்.வி.எஸ்., ஜூவல்லரியில் முதலீடு செய்தவர்கள், புகார் அளிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மினி பஸ் ஸ்டாண்ட் அருகில், சேலத்தை தலைமையிடமாக கொண்டு, சபரிசங்கர் என்பவர் எஸ்.வி.எஸ்., ஜூவல்லரி நடத்தி வந்தார். அதில், பழைய தங்க நகைக்கு, புதிய நகை தருவதாகவும், முதலீடு செய்யும் தொகைக்கு, இரண்டு சதவீதம் வட்டி தருவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது.
அதை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாந்து விட்டதாக, புகார்கள் வந்துள்ளன. இதனால், ஜூவல்லரி நடத்தி வந்த சபரி சங்கர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் வரும், 31க்குள் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம், காமதேனு நகர், வெங்கமேடு, கரூர் என்ற முகவரியில், தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.