/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
/
கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ADDED : அக் 06, 2024 03:03 AM
கரூர்: தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் பொன் ஜெயராம் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நேற்று
நடந்தது.
அதில், தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வில் வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பணி வழங்க வேண்டும், ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடிய வகையில், உரிய விதி திருத்தம் வழங்க வேண்டும், அமைச்சு பணியாளர்களுக்கும் வேலை நேரத்தை காலை, 10:00 மணி முதல், மாலை, 5:45 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும், அமைச்சு பணியாளர்களுக்கு கால-முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் செல்வகுமார், பொதுச்செ-யலாளர் வினோத் குமார், பொருளாளர் விஜய மனோகரன் உள்-பட பலர் பங்கேற்றனர்.