தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்

கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்

கல்வி கடன் விழிப்புணர்வு முகாம்


ADDED : அக் 18, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், கல்வி கடன் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

பின், அவர் கூறியதாவது:

பி.எம். வித்யாலக்ஷ்மி இணையதளம் வழியாக, கல்வி கடன் விண்ணப்பிக்கும் பயிற்சி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கும், ஒரு பேராசிரியருக்கும் வழங்கப்பட்டது. பயிற்சி வாயிலாக கல்வி கடன் தேவைப்படும் கல்லுாரிகளின் மற்ற மாணவர்களுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையும் மற்றும் ஆலோசனை மேற்கொள்வதற்காகவும் பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான விபரங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தங்களுக்கு விருப்பமான வங்கி மற்றும் வங்கி கிளையை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. 94426 13165, 04324 234815 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us