/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் எம்.குமாரசாமி கல்லுாரியில் முகாம் ரூ.1.20 கோடிக்கு கல்வி கடன் வழங்கல்

ADDED : நவ 28, 2025 01:45 AM
கரூர், கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் நடத்த சிறப்பு கல்வி கடன் முகாமில், மாணவ, மாணவியருக்கு, 1.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து சிறப்பு கல்வி கடன் முகாமை நடத்தியது. கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து, வங்கி அலுவலர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
கரூர் டி.ஆர்.ஓ., விமல்ராஜ், 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கல்வி கடனுக்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி இணை செயலாளர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.