ADDED : மே 10, 2025 01:06 AM
அ நிறம் | அளவு
நாமக்கல், நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 515 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 570, ஐதராபாத், 490, விஜயவாடா, 500, பர்வாலா, 487, மும்பை, 555, மைசூரு, 555, பெங்களூரு, 540, கோல்கட்டா, 560, டில்லி, 510 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, ஆறு ரூபாய் உயர்த்தி, 92 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
