/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி பணி
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி பணி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி பணி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி பணி
ADDED : ஜூன் 13, 2025 01:54 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கத்திரிக்காய் சாகுபடி பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையகுளத்துப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, கோவக்குளம், தாராபுரத்தனுார் பகுதிகளில் பல்வேறு காய்கறி சாகுபடி பணி நடந்து வருகிறது. குறிப்பாக, கத்திரிக்காய் சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது செடிகளில் இருந்து, காய்கள் பறிக்கப்பட்டு கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. குறைந்த நாட்களில் வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.