கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி பணி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி பணி
ADDED : ஜூன் 07, 2026 05:33 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கத்திரிக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம்,
அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, வயலுார், பஞ்சப்பட்டி, கீரனுார்,
கொசூர், பாப்பகாப்பட்டி, சிவாயம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள்
காய்கறி சாகுபடி செய்துள்ளனர். இதில் கத்திரிக்காய் நாற்று நடவு
செய்யப்பட்டு, காய்கள் விளைச்சல் கண்டுள்ளன.
இவற்றை அறுவடை
செய்யும் விவசாயிகள் கரூர், திருச்சி, தோகைமலை, குளித்தலை ஆகிய
பகுதிகளில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, கொண்டு
சென்று விற்பனை செய்கின்றனர். வரத்து சீராக இருப்பதால்,
விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. தற்போது
கத்திரிக்காய் சில்லரை விற்பனையாக கிலோ, 40 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது.
