/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி விழா நிறைவு
/
அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி விழா நிறைவு
அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி விழா நிறைவு
அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி விழா நிறைவு
ADDED : ஜன 21, 2025 06:52 AM
கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
பிரசித்தி பெற்ற, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிச., 31ல் தொடர்ந்து, பகல் பத்து உற்சவம் நடந்தது. கடந்த, 9ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோல த்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 அதிகாலை, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பிறகு, ராப்பத்து நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் வரை நடந்தது. அதில், பல்வேறு கோலத்தில் உற்சவர் ரங்கநாதர்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகளுடன், வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெற்றது.