/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடியிருப்பு பகுதியில் வலம் வரும் வியாபாரிகள் ஸ்பீக்கர் சத்தத்தால் முதியோர், குழந்தைகள் பாதிப்பு

ADDED : அக் 22, 2025 01:14 AM
கரூர், ஸ்பீக்கர்களை அலறவிட்டபடி குடியிருப்பு பகுதியில் நடமாடும் வியாபாரி
கள் பொருட்களை விற்க வருவதால், இரைச்சல் காரணமாக முதியோர், நோயாளிகள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, இஞ்சி, தக்காளி, வெங்காயம், பூண்டு, நிலக்கடலை உள்பட பல வகையான உணவு பொருட்களை சிறிய சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதில், ஆட்டோ, ட்ரை சைக்கிள், மினிலாரி, மினி வேன்களில் கொண்டு வரும் பொருட்களை விற்க ஸ்பீக்கர், சிறிய வகை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பஸ் ஸ்டாப், கடைவீதி, அரசு அலுவலகங்கள் மட்டு மல்லாது, குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் கடை வியாபாரிகள் செல்கின்றனர். ஒலிபெருக்கி மூலம் பதிவு செய்த குரலை தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டே இருப்பதால், இந்த சத்தம் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. மூத்த குடிமக்கள், குழந்தைகள், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகின்றனர்.
மேலும், குடியிருப்புப் பகுதிகளில் அதிகபட்ச இரைச்சல் பகல் நேரங்களில், 65 டெசிபலையும், இரவு நேரங்களில், 55 டெசிபலையும் தாண்டக்கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறை கூறுகிறது. இந்த சத்தம், 85 டெசிபலுக்கு மேல் இருந்தால், அது செவித்திறனைப் பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதிக ஒலி எழுப்பும் வகையில் உள்ள வியாபாரிகளில் வாகனங்களில் உரிய அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.