ADDED : பிப் 10, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 77; இவர் கடந்த, 6 இரவு கொசுவர்த்தியை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஜெயச்சந்திரனின் உடையில் தீப்பிடித்தது.
இதில், தீக்காயமடைந்த ஜெயச்சந்திரன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.