/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
ADDED : ஜன 29, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, டீ கடையில் புகையிலை பொருட்களை விற்ற, முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., லட்சுமி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் தொழிற்பேட்டை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, புகையிலை குட்கா பொருட்களை டீ கடையில் வைத்து விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், 72, என்பவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

