/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
ADDED : செப் 10, 2025 02:06 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, காசி விஸ்வநாதர் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தும்மலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சீரங்கன், 70. இவர், அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடியை அடுத்த வடகம்பாடி கிராமத்தில் உள்ள, குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு, குமராண்டான்வலசு பகுதியில் தனது மகன் ரங்கன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், சீரங்கன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சீரங்கன் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், சீரங்கன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத
வாகனம் குறித்து
விசாரித்து வருகின்றனர்.