/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
/
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
ADDED : மார் 30, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
கரூர்:கரூர் அருகே, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி அரசு காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 76; இவர் கடந்த, 27ல் வீட்டில் உள்ள, படிக்கட்டில் ஏறும் போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் படுகாயம் அடைந்த தங்கவேல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, தங்கவேலுவின் உறவினர் உஷாதேவி, 40; கொடுத்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.