ADDED : அக் 18, 2026 06:50 AM
அரவக்குறிச்சி:தென்னிலை அருகே முன்னாள் சென்ற லாரி மீது, கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல்
மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர்
நாராயணசாமி, 80. இவர் தனது போர்ட் காரில், பேரன் சந்தீப்புடன்
கோவையில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். காரை
சந்தீப் ஓட்டினார். இவர்களது வாகனம் நொச்சிக்காட்டு வலசு பிரிவு அருகே
வந்தபோது, கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள எரல்காடு அடுத்த
வழவங்காடு தெற்கு, பொய்கட்டில்வலசை சேர்ந்த சலீம், 45 என்பவர் ஓட்டி
வந்த ஈச்சர் லாரியை, எந்தவித சிக்னலும் இல்லாமல் திடீரென பிரேக்
பிடித்தார்.
இதனால் வேகமாக வந்து கொண்டிருந்த கார், லாரியின்
பின்னால் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நாராயணசாமியை,
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு
பரிசோதித்த மருத்துவர்கள், நாராயணசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக
தெரிவித்தனர். தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.
