/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீர் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
/
நீர் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
ADDED : நவ 28, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீர் தொட்டியில் தவறி
விழுந்து மூதாட்டி சாவு
பெருந்துறை, நவ. 28-
பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம், மூங்கில்பாளையத்தை சேர்ந்த பொங்கியண்ணகவுண்டர் மனைவி ராமயாள், 87. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தரை மட்டத் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர், நீரில் மூழ்கி இறந்துள்ளார். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.