ADDED : ஏப் 26, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
கரூர், கரூரில், கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் - திருச்சி சாலை, படிக்கட்டு துறை பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளில், அதிகளவில் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கழிவுநீர் வாய்க்கால் தெரியாத அளவில், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள், கழிவுநீர் வாய்க்காலில் உலா வருகின்றன. இதனால், படிக்கட்டு துறை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, படிக்கட்டு துறை பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் உள்ள, செடிகளை அகற்ற, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
