ADDED : பிப் 04, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், ஆட்சிமங்கலம் கே.எம். புதுார் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 80; இவர் கடந்த, 23ல் இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவித-மாக தீ, லட்சுமி யின் சேலையில் பிடித்து எரிந்தது.
அதில், தீக்-காயம் அடைந்த லட்சுமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, லட்-சுமியின் மகன் தங்கவேல், 56, கொடுத்த புகார் படி தான்தோன்றி-மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.