தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்


ADDED : மார் 02, 2024 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: மருதுார் டவுன் பஞ்., விஸ்வ நாதபுரம் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என கூறி, வரும் எம்.பி., தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., விசுவநாதபுரம் சுப்பன் ஆசாரி களம் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு, நடுப்பட்டி தனியார் வங்கி அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய பட்டா நிலத்தின் வழியாகவும், பின்பு வண்டி பாதையின் வழியாகவும் கிராமத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் இங்குள்ள வாய்க்காலை தனியார் இரும்பு கம்பி வேலி போட்டு தடுத்து விட்டனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிராமத்தின் முன்பகுதியில் டிஜிட்டல் பேனர், கருப்பு கொடிதோரணம், வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியும் பொது மக்கள் வரும் எம்.பி., தேர்தலை புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருதுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் விஜயன் கூறியதாவது:

இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை, தனியார் பட்டா நிலத்தில் இருந்து வருகிறது. பொது மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து முன்னாள் கலெக்டர் பிரபு சங்கரிடம் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் வந்து பார்த்து, கிராம மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த மாதம் தனியார் நிலத்தில் உள்ள வாய்க்காலை, நிலத்தின் உரிமையாளர் கால்நடைகள் தொல்லையால் பயிரை காப்பாற்றுவதற்காக இரும்பு கம்பி போட்டு பாதுகாத்துள்ளார். கன்னி வாய்க்கால் கம்பி வேலியை அகற்றிட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us