ADDED : ஏப் 01, 2026 05:38 AM
விழிப்புணர்வு பேரணி தரகம்பட்டியில் உள்ள, கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 100 சதவீதம் ஓட்டளிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி ஒன்றிய மேலாளர் (பொது) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். 100 சதவீதம் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. வையம்பட்டி- மைலம்பட்டி மெயின் ரோடு, முக்கிய வீதிகள், கடைவீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மக்களிடம் வழங்கப்பட்டது.
இதேபோல், 85 வயது பூர்த்தி
யடைந்த வயது முதிர்ந்தவர்களுக்கும், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுக்கும் அழைப்பிதழை வழங்கி, ஏப்., 23 தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்திற்கு வருகை தந்து, தங்களது ஓட்டை அளித்து ஜனநாயக கடமையாற்ற வருகை தரவேண்டும். மேலும் ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு அளிப்பது நமது கடமை. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்து வாக்களிக்க வேண்டும். பெண்கள் அனைவரும் வாக்களித்து நமது உரிமையை பெற வேண்டும் என, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், சத்துணவு திட்டத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்வாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
