/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திண்டுக்கல் சாலையில் மின் விளக்குகள் தேவை
/
திண்டுக்கல் சாலையில் மின் விளக்குகள் தேவை
ADDED : அக் 30, 2025 02:22 AM
கரூர்,  கரூர்-திண்டுக்கல் விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-திண்டுக்கல் சாலையில், வெள்ளியணை, மணவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், கரூர்-திண்டுக்கல் சாலையில், வெங்ககல்பட்டியில் இருந்து, வெள்ளியணை வரை சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கியது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் இருளில் மூழ்கியுள்ளது.
எனவே, புதிய கரூர்-திண்டுக்கல் விரிவாக்க சாலையில், மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

