தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/எலக்ட்ரிக் மொபட்டில் தீ

எலக்ட்ரிக் மொபட்டில் தீ

எலக்ட்ரிக் மொபட்டில் தீ


ADDED : ஜூன் 06, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூரில் நேற்று இரவு, எலக்ட்ரிக் மொபட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், சுக்காலியூரை சேர்ந்தவர் தீபக், 30; கரூரில் உள்ள இயற்கை பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு, 8:30 மணிக்கு இயற்கை பொருட்களை டோர் டெலிவரி செய்ய, எலக்ட்ரிக் மொபட்டில், கரூர்-கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட்டின் பின்புறம் புகை வந்தது. பிறகு, எரிய தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த தீபக், மொபட்டை சாலையில் நிறுத்தி விட்டு, ஒதுங்கி நின்று கொண்டார். கரூர் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, மொபட்டில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதனால், கரூர்-கோவை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us