ADDED : அக் 15, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் மோட்டார்
திருடியவர் கைது
கரூர், அக். 15-
கரூர் அருகே, மின் மோட்டார் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 38; இவர், வெங்கமேட்டில் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த, 12 ல் பிரின்டிங் பிரஸில் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு மின் மோட்டார்களை பஞ்சமாதேவியை சேர்ந்த மதிவாணன், 39; என்பவர் திருடியுள்ளார்.
இதுகுறித்து, பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் மதிவாணனை கைது செய்தனர்.

