சேதமடைந்த நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்
சேதமடைந்த நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்
ADDED : செப் 05, 2026 06:24 AM

கரூர்:கரூர்
அருகே, மின்சார டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்கள் சேதம் அடைந்த
நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
கரூர்-
- கோவை சாலை முனியப்பன் கோவில் பிரிவில், ஏராளமான வீடுகள் உள்ளன.
மேலும், தனியார் வங்கியின் தலைமை அலுவலகம், பள்ளிகள் உள்ளன. அதற்காக,
சாலை ஓரத்தில் மின்சார டிரான்ஸ் பார்மர் அமைக்கப்பட்டு, மின்
வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சார
டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்கள் சேதம் அடைந்த நிலையில், எந்நேரமும்
சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, அந்த பகுதி மக்கள், மின்
வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், டிரான்ஸ்பார்மர் சிமென்ட்
துாண்களை மாற்றவில்லை.
இதனால், சேதம் அடைந்த நிலையில் உள்ள, மின்சார
டிரான்ஸ்பார்மரில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால்,
பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
எனவே, கரூர் - கோவை சாலை முனியப்பன்
கோவில் பிரிவில், சேதமடைந்த நிலையில் உள்ள, மின்சார டிரா
ன்ஸ்பார்மரின் சிமென்ட் துாண்களை மாற்ற, கரூர் மின்வாரிய அதிகாரிகள்
நடவடிக்கை எடுப்பது அவசியம்.
