/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மின்பாதுகாப்பு பயிற்சி முகாம்
/
கரூரில் மின்பாதுகாப்பு பயிற்சி முகாம்
ADDED : செப் 13, 2024 06:47 AM
கரூர்: கரூரில் மின்பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது. தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமை வகித்தார். செயற்பொறியாளர் அசோக்குமார், மின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கி பேசியதாவது:
பணியின் போது மின்விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும். கையுறை, இடுப்பு கயிறு மற்றும் எர்த் ராடு ஆகிய மின்பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தி விழிப்போடு பணியாற்ற வேண்டும்.
இயற்கை இடர்பாட்டால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில், மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க, போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும், மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் மற்றும் கேபிள் வயர்கள் கட்டினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார். செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

