ADDED : செப் 24, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
கரூர்:வாங்கல் அருகே, மயங்கி விழுந்த எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் உயிரிழந்தார்.
கரூர்
மாவட்டம், தான்தோன்றிமலை பாரதியார் நகரை சேர்ந்தவர் திருமாறன், 51.
இவர், நெரூரில் உள்ள திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்ட பம்பிங்
ஸ்டேஷனில், எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், வாங்கல் அருகே அச்சமாபுரம் காவிரியாற்றில் நின்று
கொண்டிருந்த, திருமாறன் கடந்த, 22ல் மயங்கி கீழே விழுந்தார். அருகில்
இருந்தவர்கள், திருமாறனை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே
திருமாறன் உயிரிழந்தார். இதுகுறித்து, திருமாறன் மனைவி சர்மிளா, 50,
போலீசில் புகார் செய்தார்.வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
