sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்வாரியத்தின் நிருபர்கள் வாட்ஸ்ஆப் குரூப்; ஹேக்கர்கள் பிடியில் சிக்கியதால் அதிர்ச்சி

/

மின்வாரியத்தின் நிருபர்கள் வாட்ஸ்ஆப் குரூப்; ஹேக்கர்கள் பிடியில் சிக்கியதால் அதிர்ச்சி

மின்வாரியத்தின் நிருபர்கள் வாட்ஸ்ஆப் குரூப்; ஹேக்கர்கள் பிடியில் சிக்கியதால் அதிர்ச்சி

மின்வாரியத்தின் நிருபர்கள் வாட்ஸ்ஆப் குரூப்; ஹேக்கர்கள் பிடியில் சிக்கியதால் அதிர்ச்சி


ADDED : அக் 25, 2024 08:08 AM

Google News

ADDED : அக் 25, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மின்வாரியத்தின், அதிகாரபூர்வமான நிருபர்கள் வாட்ஸ்ஆப் குரூப் ஹேக்கர்கள் பிடியில் சிக்கி-யது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக, பொது-மக்களுக்கு மின்தடை உள்பட பல்வேறு தகவல்-களை தெரிவிக்க, மாவட்ட அளவில் வாட்ஸ்ஆப் குரூப் உருவாக்கப்பட்டது. இதில், மின்வாரிய அதிகாரிகள், செய்திதாள், 'டிவி' நிருபர்கள் உள்-பட அனைத்து ஊடகங்கள் இணைக்கப்பட்டுள்-ளன. இதன்படி, கரூர் மாவட்டத்தில், கரூர் டி.என்.இ.பி., மீடியா என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை, 10:14 மணிக்கு இந்த குரூப் பெயர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அதன் லோகோவுடன் பெயர் மாற்றப்பட்-டது. மேலும், எஸ்.பி.ஐ., ரிவார்ட்ஸ் என்ற மொபைல் செயலி லிங்க்கை பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் நிருபர்கள் சார்பில், மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவித்ததைய-டுத்து, மின்வாரிய வாட்ஸ்ஆப் குழுவானது ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும், போலீசார் அறிவுரை கூறினர்.

இது குறித்து விசாரித்ததில், வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில், உதவி பொறியாள-ராக பணிபுரிந்து வரும் பிரபாகரன் என்பவரது மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டது தெரிந்தது. அவர் வைத்துள்ள, அனைத்து வாட்ஸ் ஆப் குழுக்-களுக்கும் போலியான செயலிகளை ஹேக்-கர்கள் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்துள்-ளது. இதையடுத்து, வாட்ஸ் ஆப் குரூப் கலைக்கப்-பட்டு விட்டது.

இதுபோல பல மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் வாட்ஸ் ஆப் உள்பட பல வழிகளில் மெசேஜ் அல்லது செயலிகள் லிங்க் மூலம் ஹேக் செய்ய வலை விரிக்கின்றனர். சந்-தேகத்திற்கு இடமளிக்கும் தகவல்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us