/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்வாரிய பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 01:32 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய கேங்க்மேன் மற்றும் பணியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் ராஜா தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கள உதவியாளராக பதவி உயர்வு அளிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர்கள் ஜெயக்குமார், சிவஞானம், கரூர் மண்டல தலைவர் சசிக்குமார், துணைத்தலைவர் சத்திய மூர்த்தி, செயலாளர் அஜித் உள்பட, பலர் பங்கேற்றனர்.