ADDED : மார் 14, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மின்வாரிய அனைத்து பொறியாளர்கள் சங்கம் சார்பில், தலைவர் முருகன் தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில் கடந்த, 1964 முதல் நடைமு-றையில் உள்ள ஊதிய உயர்வை, வகுப்பு, 1,2 அலுவலர்களுக்கு வழங்காத தமிழக அரசு மற்றும் மின் வாரியத்தை கண்டித்து கோரிக்கை எழுப்பப்பட்டது.போராட்டத்தில், செயலாளர் கோபி உள்பட மின்வாரிய பொறியா-ளர்கள் பங்கேற்றனர்.
